×

குடியாத்தம் அருகே 16 யானைகள் அட்டகாசம்: விடிய விடிய தூக்கத்தை இழந்து தவித்த கிராம மக்கள்

குடியாத்தம் :  குடியாத்தம் அருகே 16 யானைகள் அட்டகாசம் செய்ததால்  கிராம மக்கள் விடிய விடிய தூக்கத்தை இழந்து தவித்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில், தமிழக- ஆந்திர எல்லையையொட்டி மலைகள் சூழ்ந்த கிராமப்பகுதிகளான தனகொண்டபல்லி, மோடி குப்பம், வலசை, கொட்டமிட்டா, சைனகுண்டா, ராமாபுரம், சீவூரான்பட்டி, மத்தேட்டிபல்லி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த இடங்களில் தமிழக- ஆந்திர எல்லையான பலமநேர் மிக அருகில் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் காட்டு பகுதியில் மழையில்லாத காரணத்தால்   யானைகள் கூட்டம் தண்ணீர் தேடி, தமிழக எல்லைகளில் உள்ள  விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மா, வாழை, நெல், தென்னை மரங்களை இரவு நேரங்களில் சேதப்படுத்திவிட்டு செல்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  வழக்கம்போல் நேற்று முன்தினம் நள்ளிரவு 16 யானைகள்,  மலையை ஒட்டியுள்ள குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்திற்குள் நுழைய முயன்றது. அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் வனத்துறையினர்   யானைகளை, பட்டாசு வெடித்து  மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் பிளிறும் சத்தத்தால்  கிராம மக்கள் விடிய விடிய தூக்கத்தை இழந்து தவித்தனர்.

Tags : Gudiyatham , 16 elephants , Gudiyatham,villagers ,lost,sleep at dawn
× RELATED சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை...